சாலையோர ஏழை முஸ்லிம் வியாபாரிக்கு கருணை கொடையாளர்களால் அடித்த ஜாக்பாட்! – வீடியோ!
புதுடெல்லி (25 மே 2020) வியாபாரத்திற்காக வைத்திருந்த மாம்பழங்களை திருடர்களிடம் இழந்து தவித்த சாலையோர வியாபாரிக்கு 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கு அதிகமான தொகை கருணை கொடையாளர்களால் கிடைத்துள்ளது. வட டெல்லியின் ஜகத்புரி பகுதியில் வண்டியில் மாம்பழம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை முஸ்லிம் வியாபாரி சோட்டா. ரம்ஜான் பெருநாளைக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது 30,000 மதிப்புள்ள மாம்பழங்கள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் இவர், வியாபாரத்திற்காக…