சாலையோர ஏழை முஸ்லிம் வியாபாரிக்கு கருணை கொடையாளர்களால் அடித்த ஜாக்பாட்! – வீடியோ!

Share this News:

புதுடெல்லி (25 மே 2020) வியாபாரத்திற்காக வைத்திருந்த மாம்பழங்களை திருடர்களிடம் இழந்து தவித்த சாலையோர வியாபாரிக்கு 24 மணி நேரத்தில் 6 லட்சத்திற்கு அதிகமான தொகை கருணை கொடையாளர்களால் கிடைத்துள்ளது.

வட டெல்லியின் ஜகத்புரி பகுதியில் வண்டியில் மாம்பழம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த ஏழை முஸ்லிம் வியாபாரி சோட்டா.

ரம்ஜான் பெருநாளைக்கு சில தினங்களுக்கு முன்பு இவரது 30,000 மதிப்புள்ள மாம்பழங்கள் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த வேளை சோற்றுக்கு கஷ்டப்படும் இவர், வியாபாரத்திற்காக வைத்திருந்த பழங்கள் கொள்ளையடிக்கப்பட்டதால் செய்வதறியாது தவித்தார்.

இச் சம்பவம் தொடர்பாக என்டிடிவி செய்தி வெளியிட்டு அவரது வங்கிக் கணக்கையும் பகிர்ந்திருந்தது.

இந்த தகவல் என்டிடிவியில் பகிரப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ரூ. 6 லட்சத்திற்கு அதிகமான தொகை சோட்டின் வங்கிக் கணக்கிற்கு வந்தது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சோட், ” என் வாழ்வே திரும்பி வந்தது போன்ற உணர்வு. நான் ரம்ஜான் பண்டிகையை மகிழ்வாக கொண்டாடுவேன். என் குழந்தைகளின் எதிர் காலத்திற்கும் இந்த தொகையை பயன்படுத்துவேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே மாம்பழங்களை கொள்ளையடித்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Share this News: