வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!
சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….