முதல்வர் குறித்து பேசியது என்ன? – ஆ.ராசா பரபரப்பு விளக்கம்!
சென்னை (28 மார்ச் 2021): ‘ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசியதை வேண்டுமென்றே சிலர் விரசமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். பெரம்பலூரில் பத்தரிக்கையாளர்கள் மத்தியில் கூறியதாவது: “ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தலைவராக வந்தார். அதனால் அவர் பரிணாம வளர்ச்சி பெற்ற முழுமையான குழந்தை என்று சொன்னேன்.ஆனால், இ.பி.எஸ்., நேர்வழியில், மக்கள் தீர்ப்பால் முதல்வராக வரவில்லை. வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு, குறுக்கு வழியில் வந்தார்….