அனல் பறக்கும் ஈரோடு தேர்தல் களம் – திமுக கூட்டணிக்கு கமல் ஹாசன் ஆதரவு?

சென்னை (23 ஜன 2023): தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தன. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம்…

மேலும்...

ஈரோடு இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்!

புதுடெல்லி (22 ஜன 2023): ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

மேலும்...

ஈரோட்டில் நடைபெறும் ஜமாத்துல் உலமாவின் தேச ஒற்றுமை மாநாடு – வீடியோ!

ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர். பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு இன்று இரவு நிறைவுறும். இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும்...

சிஏஏ விவகாரம்: முஸ்லிம் பெண்ணின் வங்கி கணக்கு புத்தகத்தில் தில்லு முல்லு செய்த வங்கி!

ஈரோடு (30 ஜன 2020): ஈரோட்டில் முஸ்லிம் பெண்ணின் வங்கிக் கணக்கு புத்தகத்தில் புலம் பெயர்ந்தவர் என பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. ஈரோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் டாக்டர் சலீம் மனைவி ஜஹானாரா பேகம் என்பவர் வங்கிக் கணக்குத் துவக்கினார். வங்கி மூலம் கணக்கு துவங்கி கணக்குப் புத்தகம் வழங்கினர். அதில் இரு இடங்களில் புலம் பெயர்ந்தவர்(migration)என பதிவாகி உள்ளது. இதை அறிந்து டாக்டர் சலீம்…

மேலும்...