வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருட்டு – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

லக்னோ (09 மார்ச் 2022): உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்குப் பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வாரணாசியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். “2017 இல், கிட்டத்தட்ட 50 இடங்களில் பாஜகவின் வெற்றி வித்தியாசம் 5,000 வாக்குகளுக்கும் குறைவாக இருந்தது என்று சுட்டிக்காட்டினார். டிரக்கில்…

மேலும்...

நம்பர் பிளேட் இல்லாத காரில் ஈவிஎம் எந்திரம் – உபியில் பரபரப்பு!

பானிபட் (12 பிப் 2022): உத்தரபிரதேச மாநிலத்தில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு காரில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நேற்று முந்தினம் (பிப்ரவரி 10ந்தேதி) 11 மாவட்டங்கள் அடங்கிய 58 தொகுதிகளில் நடைபெற்றது. காலை 7 மணியளவில் வாக்கு பதிவு தொடங்கியது மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில், அங்குள்ள கைரானா…

மேலும்...
Supreme court of India

மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்துவதை ரத்து செய்யும் மனு – உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடிவு!

புதுடெல்லி (20 ஜன 2022): தேர்தலில் வாக்குச் சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்படுத்தும் முடிவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளின் அரசியலமைப்பு செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கிய மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை பரிசீலிக்கும். உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்…

மேலும்...

ஓட்டு இயந்திரங்கள் – அறிவு சோம்பேறிகள்

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசிக்கிலிருந்து வெளியாகும் கரன்சிகளுக்கு இணையானவை. நம்ம நாட்டில் கரன்சி போன இடமும் தெரியாது.. வாக்கு இயந்திரம் போகும் இடமும் தெரியாது. முதல் நிலை சோதனைகள் முடிந்த பிறகு எடுத்தேற்ற ஆய்வு (randomisation) நடத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி வசம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் மி.வா.இபாதுகாப்புக்கு தேர்தல் அதிகாரி பொறுப்பேற்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பிரத்தியேக எண்ணிடப்பட்ட மி.வா.இ களை முந்தின நாள் பாதுகாப்பு அறையில்…

மேலும்...

ஈவிஎம் முறையில் தேர்தல் நடத்துவதற்கு தடை கோரும் மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

புதுடெல்லி (07 ஜன 2021): மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (ஈ.வி.எம்) பதிலாக தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஈவிஎம் மெஷினில் நடத்தப்படும் தேர்தல் முறைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முறைகேடுகள் மற்றும் அவநம்பிக்கை காரணமாக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஈ.வி.எம் அரசியலமைப்பின் 324 வது பிரிவை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும்…

மேலும்...