புதுடெல்லி (07 ஜன 2021): மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு (ஈ.வி.எம்) பதிலாக தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஈவிஎம் மெஷினில் நடத்தப்படும் தேர்தல் முறைக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முறைகேடுகள் மற்றும் அவநம்பிக்கை காரணமாக பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஈ.வி.எம் அரசியலமைப்பின் 324 வது பிரிவை மீறுவதாகவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். வாக்குச் சீட்டுகள் மிகவும் வெளிப்படையானவை மற்றும் நம்பகமானவை. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கூட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் வாக்களிப்பது ஒரு அடிப்படை உரிமை என்று வாதிடுவதற்கு முன்பு அரசியலமைப்பைப் படிக்க வேண்டும் என்று கூறிய நிதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.