புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது – நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!

புதுச்சேரி (22 பிப் 2021): புதுவை சட்டசபையில் காங்கிரஸ்- திமுக தலைமையிலான அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்., அரசு இன்று (பிப்.,22) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மொத்தம் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் முதல்வர் நாராயணசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநர் தமிழிசையிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து…

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா!

போபால் (20 மார்ச் 2020): மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில கமல்நாத் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்னதாக கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்...