கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட அரசியல் நெருக்கடியே கரணம் – கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு!
கொல்கத்தா (04 ஜன 2021): பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும்நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார். பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவருக்கு…