HCL நிறுவன தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார் திடீர் இராஜினாமா..! புதிய தலைவரானார் ரோஷ்னி நாடார்!
நாய்டா(18 ஜூலை,2020):ஐடி தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரான ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 3-வது பெரிய ஐ.டி நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் நாய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது….