நாய்டா(18 ஜூலை,2020):ஐடி தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார், தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவரான ஷிவ் நாடாரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 3-வது பெரிய ஐ.டி நிறுவனமாகவும் (HCL) இந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் நாய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் மகள் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா தலைவராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியிலேயே பிறந்து வளர்ந்த ரோஷ்னி, பின்னர் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து HCL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், இயக்குநர்களுள் ஒருவராகவும் செயல்பட்டு வந்தவர். ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வரும் உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் 2017 முதல் 2019 வரை இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிகர வருவாய் ரூ.2,925 கோடி ஆக உள்ளதாக அந்நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை தெரிவித்தாலும், 7.3% அளவுக்கு வருவாய் குறைந்துள்ளதுதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
HCL நிறுவன தலைவர் பதவியிலிருந்து ஷிவ் நாடார், இராஜினாமா செய்துவிட்டாலும், Chief Strategic Officer –தலைமை மூலத்திறன் அதிகாரி எனும் வகையில் ஹெச்.சி.எல் டெக்கின் நிர்வாக இயக்குநராக தொடர்ந்து பணியாற்றுவார் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.