ரஜினியின் ரத்த அழுத்தம் குறையவில்லை – டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம்!
ஐதராபாத் (26 டிச 2020): ரஜினியின் ரத்த அழுத்தம் குறையாததால் ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவெடுப்பதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்….