புதுடெல்லி (11 மே 2020): முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், டாக்டர் நிதீஷ் நாயர் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவரை கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், கொரோனா நோய்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை அவருக்கு இன்று காலை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மன்மோகன் சிங் மாற்றப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.