தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை (Stem Cells) தானமாக வழங்கும் கேரள மாணவி!
சென்னை (27 மார்ச் 2020): தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார் கேரள மாணவி ஹிபா ஷமார். சென்னை மருத்துவமனையில் தண்டு உயிரணுக்கள் (Stem Cells) பற்றாக்குறையால் உயிருக்கு போராடி வரும் நோயாளி ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவி ஹிபா என்பவர் தனது தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஹிபா கேரள மாநிலம் எர்ணாகுளம் தெரஸா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். ஷமார், ஜீனத் தம்பதிகளின் மகளான…