இஸ்ரேலிய படை பாலஸ்தீனர்களுக்கு இடையே மோதல் – ஒரு பாலஸ்தீனர் சுட்டுக்கொலை!

ரஹ்மல்லா (06 அக் 2022): பாலஸ்தீன் வடக்கு மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகருக்கு வடக்கே உள்ள டெய்ர் அல்-ஹதாப் கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்களுடன் நடந்த மோதலின் போது 21 வயதான நாசர் சாகல் என்ற பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் இருவர் மற்றும் பாலஸ்தீனிய அரசாங்கத்தின் இரண்டு பத்திரிகையாளர்கள் உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். என்று…

மேலும்...

இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!

தோஹா (15 செப் 2022): உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாரில் தற்காலிக தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையை காண வரும் இஸ்ரேல் மக்களுக்கு உதவி புரியும் விதமாக கத்தாரில் தற்காலிக தூதரகம் அமைக்க இஸ்ரேல் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை கத்தார் நிராகரித்ததாக உள்ளூர் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2008 காசா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை கத்தார் துண்டித்தது. சர்வதேச…

மேலும்...

இஸ்ரேலில் முடிவுக்கு வந்த நெதன்யாகுவின் ஆட்சி!

ஜெருசலேம் (14 ஜூன் 2021): இஸ்ரேலின் பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டதன் மூலம், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலில் கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இந்நிலையில் அரபு கட்சி தலைமையில் 8…

மேலும்...

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் காசாவில் 52 குழந்தைகள் உட்பட 181 பேர் பலி!

காசா (16 மே 2021):காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 181 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நகரவாசிகளிடையே காயங்களின் எண்ணிக்கையும் 1,225 ஆக உயர்ந்தது. பாலஸ்தீன் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. டஜன் கணக்கான கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்னர். இதுவரை 1,225 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காசா நகரத்தின்…

மேலும்...

டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

புதுடெல்லி (29 ஜன 2021):டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் கூறும் போது, “குண்டுவெடிப்பு தொடர்பாக மாலை 5:45 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது, நாங்கள் அந்த இடத்தை அடைந்தோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என கூறினார். குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும்...

காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம்!

காசா(26 டிச 2020): காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தளங்களை நோக்கியே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடத்திய இந்த தாக்குதலில் ஆறு வயது சிறுமியும் 20 வயது இளைஞரும் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் கிழக்குப்…

மேலும்...

இஸ்ரேலின் அராஜகம் முடிவுறாமல் அமைதி இல்லை – கத்தர்!

ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு முடிவு வராமல் அரபு பிரதேசத்தில் அமைதி திரும்புவதற்கு வாய்ப்பேயில்லை என ஐக்கிய நாடுகள் சபையில் கத்தர் அமீர் தமீம் பின் ஹமது அல்தானி கூறியுள்ளார். நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது பொதுசபை கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட கத்தர் அமீர், அரபு பிரதேசத்தில் இஸ்ரேல் நடத்தும் அராஜகங்களுக்கு முடிவு கொண்டு வரும் விசயத்தில் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச நிறுவனங்களும் கண்மூடி இருப்பதற்குக் கண்டனம்…

மேலும்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை!

ஜெரூசலம் (02 ஏப் 2020): இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமி நெதன்யாகுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் இஸ்ரேலிலும் அதிக அளவில் பரவி வருகிறது. இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சர் யாகோவ் லிட்ஸ்மனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனை அடுத்து…

மேலும்...

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டு இனியும் அமைதி காக்க முடியாது: மகாதீர் முஹம்மது!

கோலாலம்பூர் (09 பிப் 2020): பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்டூழியங்கள் நடக்கும் போது…

மேலும்...