காசா(26 டிச 2020): காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தளங்களை நோக்கியே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது
இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் நடத்திய இந்த தாக்குதலில் ஆறு வயது சிறுமியும் 20 வயது இளைஞரும் காயமடைந்ததாக பாலஸ்தீன அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்துள்ளது. வான்வழித் தாக்குதல்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் மின் இணைப்புகளை துண்டிக்கப் பட்டன. , ஊனமுற்றோர் மையம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளும் இத்தாக்குதலில் சேதமடைந்தன.