சிறுநீரகம் பற்றி அறிவோம் -பகுதி 2
உயிர் – ஒரு வேதி செயல். பல இரசாயன இயக்கங்களின் வெளிப்பாடு. உயிர் வாழ உணவு. உணவின்றி உயிர்வேதியல் இயக்கம் இல்லை. உடல் வெப்பம் உயிர் இயக்கத்தின் வெளிப்பாடு. வேதிச்செயல்கள் கழிவுகளை உருவாக்குகின்றன,24 மணி நேரமும் ,மூச்சு நிக்கும் வரையிலும். 1300 க்கும் மேற்பட்ட கழிவுகள் உருவாகின்றன, தினமும். இவை இரத்த கழிவுகளாகவும், உறுப்புகளின் ஊடே விரவியும் இருக்கின்றன. இக்கழிவுகளை வெளியேற்ற இயற்கை செய்த உபாயம் சிறுநீரகங்கள். திடக்கழிவுகளை மலக்குடல் மூலமும், திரவ கழிவுகளை சிறுநீரகங்கள் மூலமும்…