கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்

கத்தாரில் பரவும் டெங்கு காய்ச்சல்!

தோஹா, கத்தார் (23 டிசம்பர் 2023): கத்தாரில் கொசுக்களின் மூலம் ஏற்படும் டெங்கு காய்ச்சல் நோய் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் குறிப்பிட்ட வகை கொசுக்கள் கத்தாரில் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து கத்தார் நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. கத்தார் நாட்டில்…

மேலும்...

மஞ்சளில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்!

பல்வேறு நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சையில் மஞ்சள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்களைக் கொல்லும் தன்மையுடையது என பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. மஞ்சள் சாறு புற்றுநோய் செல்களை எளிதில் கரைத்து அழிக்கிறது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மஞ்சள் பல நூற்றாண்டுகளாக பல நோய்களுக்கும், அழகு மேம்பாட்டிற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் ஆன்டிவைரல், ஆன்டிபயாடிக், ஆன்டிஆக்ஸிடன்ட், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து…

மேலும்...

கிவி KIWI பழத்தின் நன்மைகள்!

குளிர்காலத்தில், பல உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தோல் பிரச்சினைகள் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. குளிர் காலத்தில் சிலருக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும். இந்த நேரத்தில், பலர் பல்வேறு வலிகளை அனுபவிக்கிறார்கள். எனவே இவைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம். உணவில் கவனமாக இருக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளை எப்போதும் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. குளிர்காலத்திலும் அப்படித்தான். பழங்களில், கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். பலரால் விரும்பப்படாத இந்தப் பழத்தில் பல ஆரோக்கிய…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசாவில் இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

துபாய் (14 டிச 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட் விசாவில் இருப்பவர்கள் புதிய விசாவிற்கு விண்ணப்பிக்க நாட்டை விட்டு வெளியேறி பின்னரே விசாவை புதுப்பிக்க வேண்டும்; இந்த நடைமுறை ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளுக்கு பொருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசிட்விசாவில் இருப்பவர்களுக்கு நாட்டிற்குள்ளிருந்து விசாவை மாற்றும் வசதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஷார்ஜா மற்றும் அபுதாபி எமிரேட்டுகளில் அமலுக்கு வந்தது. ஆனால் துபாயில் தற்போதைய நிலையே தொடரும். புதிய முடிவின் மூலம், உங்கள்…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (13 டிச 2022): குளிர்காலம் கடுமையாக இருப்பதால் சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களை விட இம்முறை சவூதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அப்துல் அலி கூறினார். தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வானிலை தொடர்பான நோய்களின்…

மேலும்...

சவூதியில் வாட் (வரி) மற்றும் வெளிநாட்டவர்களுக்கான லெவியில் மாற்றமில்லை!

ரியாத் (09 டிச 2022): சவூதி அரேபியாவில் வெளிநாட்டினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் வரிகளில் எந்த மாற்றமும் இல்லை. “கோவிட் காலத்தில், உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படாது. தற்போதைக்கு தற்போதைய முறை தொடரும்” என்று சவுதி அரேபிய நிதியமைச்சர் முகமது அல் ஜடான் அறிவித்துள்ளார். “சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கான லெவியில், காப்பீடு உட்பட 12,000 ரியால்களுக்கு மேல் செலவிடுவார். பட்ஜெட்டில் இது ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாகவும் உள்ளது. வெளிநாட்டவர்களின்…

மேலும்...

சக ஊழியரை மிரட்டிய மேலாளருக்கு அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம்!

துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது. மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும், அவரது மகனையும் கொன்றுவிடுவதாக மேலாளர் மிரட்டியுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றத்தால் 10000 திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலாளர் தன்னையும் தனது எட்டு வயது மகனையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த…

மேலும்...

துபாய் மற்றும் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

துபாய் (02 டிச 2021): கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் நுழைந்ததை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் உறுதிபடுத்தியுள்ளன. கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமிக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மற்றும் வீரியமிக்க வைரசுக்கு ஒமிக்ரான் என்று விஞ்ஞானிகள் பெயர் வைத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் இது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சவூதி அரேபியா மற்றும்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

துபாய் (27 ஜுன் 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு டெல்டா வகை கொரோனா வைரஸும் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=vOHJ9hF2K6I இன்று, ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர். மேலும் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் 2,000 திற்கும் அதிகமாக காணப்படுகிறது. நேற்று, சனிக்கிழமை மட்டும் 10 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை 4 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்….

மேலும்...

சவூதியில் அனைத்து பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் உணவகங்கள் மீண்டும் மூடல்!

ரியாத் (04 பிப் 2021): கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அடுத்த 10 நாட்களுக்கு சவூதி அரேபியாவில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் மற்றும் உணவகங்களையும் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, வியாழக்கிழமை (பிப் .4), இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும் உலகின் சில நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையை…

மேலும்...