அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில்…

மேலும்...

கோபேக் அமித் ஷா – கொல்கத்தாவை கதறவிட்ட எதிர் கட்சியினர்!

கொல்கத்தா (01 மார்ச் 2020): கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கொல்கத்தாவில் சிஏஏ ஆதரவு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கொகட்த்தா சென்றார். அப்போது கொல்கத்தா விமான நிலையம் அருகே Go Back Amit Shah என்ற பதாகைகளை ஏந்தியபடி இடதுசாரிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அமித்ஷாவின் வருகைக்கு எதிராக வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டும் முழக்கங்களை…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் போராட்டம்!

கொல்கத்தா (20 ஜன 2020): மேற்கு வங்கத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்திய கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் கள் தவிர்த்து அனைத்து மதத்தினரும் குடியுரிமை பெறும் வகையில் உள்ள இந்த சட்டத்திற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் 8000 கிறிஸ்தவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம். பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கொல்கத்தா (07 ஜன 2020): டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் காயம் அடைந்த 20 மாணவர்கள் எய்ம்ஸ்…

மேலும்...