வட இந்தியாவில் இடி மின்னல் தாக்கி 68 பேர் பலி!
லக்னோ (12 ஜூலை 2021): வட இந்தியாவில் பெய்துவரும் பலத்த மழையாலும் மின்னல் தாக்கியதில் 68 பேர் இறந்துள்ளனர். வட இந்தியாவில் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் உத்தரபிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளன. குறைந்தது 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 20 பேரும், மத்திய பிரதேசத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் பலியானவர்களில் 7 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கான்பூர் தேஹத் மற்றும் ஃபதேபூரில் ஐந்து…