பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டு இனியும் அமைதி காக்க முடியாது: மகாதீர் முஹம்மது!
கோலாலம்பூர் (09 பிப் 2020): பாலத்தீனர்கள் மீதான இஸ்ரேலின் ஒடுக்குமுறையைக் கண்டு மலேசியா இனியும் அமைதி காக்காது என மலேசிய பிரதமர் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் பாலத்தீனத்துக்கு ஆதரவாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசியபோதே மகாதீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “நாங்கள் (மலேசியா) கடமை உணர்வுடன் உள்ளோம். தங்களை நீதி மற்றும் சுதந்திரத்தின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலம் மிக்க நாடுகள், அட்டூழியங்கள் நடக்கும் போது…