மாரிதாஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செக்!

புதுடெல்லி (29 ஏப் 2022): பிரபல யூடூபர் மாரிதாசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மாரிதாஸ் மீது பல அவதூறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு – மாரிதாஸ் மீண்டும் கைது!

தேனி(16 டிச 2021): தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய வழக்கிலும் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, தப்லீக் ஜமாஅத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act…

மேலும்...

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து!

மதுரை (14 டிச 2021): யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பிபின் ராவத் மரண விவகாரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மாநிலத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மாநில அரசுக்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ராமசுப்ரமணியன் என்பவர் சைபர்கிரைம்…

மேலும்...

யூடூபர் மாரிதாஸ் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்!

சென்னை (10 டிச 2021): யூடூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதை தமிழகம் மொத்தமும் ஆதரித்து வரும் நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாரிதாஸ் கைதை கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து சீமான் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்திற்கு தமிழகத்தை காஷ்மீருடன் இணைத்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது, கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை…

மேலும்...