புதுடெல்லி (29 ஏப் 2022): பிரபல யூடூபர் மாரிதாசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மாரிதாஸ் மீது பல அவதூறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த ட்விட்டில் எந்த தவறும் இல்லை என்று கூறி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து கைதான மாரிதாஸ் விடுதலையானார். தற்போது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.