பாஜகவுடன் இணைவதைவிட சாவதே மேல் – நிதிஷ்குமார்!
பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார். முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். நிதிஷின் செல்வாக்கற்ற தன்மையால் 2020 சட்டசபை தேர்தலில் ஜே.டி.(யு) பல இடங்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஜெய்ஸ்வால் கூறினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நிதிஷ்குமார், சாக நேரிட்டாலும் பாஜகவுடன் இணையமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தாம்…