பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். நிதிஷின் செல்வாக்கற்ற தன்மையால் 2020 சட்டசபை தேர்தலில் ஜே.டி.(யு) பல இடங்களை இழக்க நேரிட்டுள்ளதாக ஜெய்ஸ்வால் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள நிதிஷ்குமார், சாக நேரிட்டாலும் பாஜகவுடன் இணையமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், தாம் முதல்வராக விரும்பவில்லை என்றும், பாஜக தன்னை முதலமைச்சராக்க வற்புறுத்தியது என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் நடக்கட்டும், யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் நிதிஷ். அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி காலத்தை நினைவு கூர்ந்த பீகார் முதல்வர், தற்போதைய பாஜக தலைமை ஆணவத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டினார்.வாஜ்பாய் மற்றும் அத்வானி மீது தனக்கு மரியாதை இருப்பதாக கூறினார்.
ஆனால், நிதிஷ்குமார் இது போன்ற கருத்து வெளியிடுவது இது முதல் முறையல்ல.கடந்த ஆண்டு பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்து விலகி, மஹாகத்பந்தனுடன் கைகோர்த்த பின், இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார். “என் வாழ்நாள் முழுவதும் இவர்களுடன் நான் எந்த வகையிலும் பழக மாட்டேன். நாம் அனைவரும் சோசலிஸ்டுகள், அவர்கள் ஒன்றாக நிற்போம், பீகாரில் முன்னேறி நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம்.” என்று நிதிஷ் கூறினார்.