வடகொரியா ஏவுகணை சோதனை – அமெரிக்கா கடும் கண்டனம்!
நியூயார்க் (27 ஜன 2022): வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து வடகொரியா புதிதாக இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறும் வகையில் வடகொரியா செயல்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த செயலுக்கு வடகொரியா விளக்கம் அளிக்க வேண்டும்…