சாப்பாடு இல்லை அதிகம் சாப்பிடாதீங்க – அதிபர் திடீர் உத்தரவு!

Share this News:

வடகொரியா (28 அக் 2021): வடகொரியாவில் கடும் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு சீல்’ வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது.

இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவு பிரப்பித்துள்ளார்.

வடகொரிய அதிபரின் இந்த உத்தரவிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply