அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் வேண்டி கோரிக்கை!
பட்டுக்கோட்டை (11 பிப் 2023): அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டி,அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாவும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஊர் மக்களிடம் இருந்து வருகிறது. அதிராம்பட்டினம் நகராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்யவும், வலியுறுத்தவும் பிப்ரவரி 10 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து முஹல்லா…