அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் வேண்டி கோரிக்கை!

Share this News:

பட்டுக்கோட்டை (11 பிப் 2023): அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டி,அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

நகராட்சியாக அறிவிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாவும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஊர் மக்களிடம் இருந்து வருகிறது. அதிராம்பட்டினம் நகராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு சென்றிருக்கிறது.

இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்யவும், வலியுறுத்தவும் பிப்ரவரி 10 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஒன்று கூடி ஆலோசித்து அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவரை நேரில் சந்தித்து வலியுறுத்தி கலந்துரையாடினர்.

கலந்துரையாடலின் பொழுது நமது சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் 11.2.2023 அன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கு, நகராட்சி தலைவர் M M S தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், துணைத் தலைவர் இராம குணசேகரன் தலைமையில் அனைத்து முகல்லா கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், அதிரை நகராட்சி திமுக கழக கவுன்சிலர்கள், திமுக கழக வார்டு செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து சென்று, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா, அண்ணாதுரை MLA அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.

கோரிக்கையை செவிமடுத்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் சில ஆலோசனைகள் வழங்கி தானும் துறை அமைச்சரிடம் சந்தித்து வலியுறுத்தி ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.


Share this News:

Leave a Reply