ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு
புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார்…