ஏர் இந்தியாவின் மொத்த பங்குகளையும் விற்க மத்திய அரசு முடிவு

Share this News:

புதுடெல்லி (27 ஜன 2020): ஏர் இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குகளையும் தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

ஏர் இந்தியா விமான நிறுவனமானது சுமார் ரூ.58,000 கோடி கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இது தவிர அந்நிறுவனத்திற்கு ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களுக்கும் மேல் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனை அடுத்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 100 % பங்குகளையும், விற்பனை செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பங்குகளை வாங்குவதற்கான விருப்பத்தை தெரிவிக்க, தனியார் நிறுவனங்களுக்கு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதியைக் கெடுவாக அறிவித்துள்ளது.

அதே சமயம், ஏர் இந்தியா இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது, ஏர் இந்தியா பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனை அடுத்து 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளது.


Share this News:

Leave a Reply