வீட்டுக்குள் வந்த இறந்த மனைவி – மகிழ்ச்சிக் கடலில் கணவர்!

பெங்களூரு (11 ஆக 2020): விபத்தில் இறந்த மனைவி தத்ரூபமாக அதே வடிவில் வீட்டுக்குள் இருக்க, குடும்பமே மகிழ்ச்சிக் கடலில் உள்ளது. இதுகுறித்த சுவாரஸ்ய சம்பவம் இதோ: கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் வணிக வளாகம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானார். இதனை அடுத்து கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவர் தற்போது புதிதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இந்நிலையில்…

மேலும்...

தஞ்சை அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்பு!

தஞ்சவூர் (09 மார்ச் 2020): தஞ்சாவூர் அருகே திருடப்பட்ட கோவில் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெரு வில் 600 ஆண்டு பழமையான ஆதீஸ்வரர் என்கிற ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 19 ஆம் தேதி பின்புறக் கதவு உடைக்கப்பட்டு ஒன்றரை யடி உயர ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வ ரர் சிலை உள்ளிட்ட சிலைகள் திருடு போயின. இது குறித்து தஞ்சாவூர் மேற்கு காவல் துறையினர், கோயில் சி.சி.டி.வி., கேமரா வில் பதிவான…

மேலும்...

அராஜக செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

சென்னை (25 ஜன 2020): தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின்…

மேலும்...

தஞ்சையில் பல லட்சம் மதிப்புள்ள கோவில் சிலை திருட்டு!

தஞ்சாவூர் (20 ஜன 2020): தஞ்சை கரந்தையில் பழமை வாய்ந்த கோவில் சிலை திருடப்பட்டுள்ளது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழமையான ஆதீஸ்வரர் என்கிற சமண கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (19ம் தேதி) காலை பின்புறக் கதவு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கோயிலில் இருந்த 3 அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதீஸ்வரர் சிலை, வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயர ஜினவாணி…

மேலும்...

பாஜக தலைவரிடம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்!

நாகப்பட்டினம் (17 ஜன 2020): நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சாமி சிலைகளைப் பதுக்கி வைத்தது தொடர்பாக பாஜக தலைவர் கைது செய்யப் பட்டுள்ளார். வேதாரண்யத்தை சேர்ந்த செல்வம். இவர் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய பாஜக செயலாளர். இவரது நண்பர் பைரவ சுந்தரம். இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் குறித்து சிலை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் சோதனை செய்தபோது,…

மேலும்...