பாஜக தலைவரிடம் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்!

Share this News:

நாகப்பட்டினம் (17 ஜன 2020): நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், சாமி சிலைகளைப் பதுக்கி வைத்தது தொடர்பாக பாஜக தலைவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

வேதாரண்யத்தை சேர்ந்த செல்வம். இவர் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய பாஜக செயலாளர். இவரது நண்பர் பைரவ சுந்தரம். இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலையில் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.

இவர்கள் குறித்து சிலை தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, ஒன்றரை அடி நீளமுள்ள உலோக அம்மன் சிலை இருந்தது. அதன் மதிப்பு பலகோடி மதிப்பாகும். இதனை அடுத்து சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்பு அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, ஏழு சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply