வாரிசு குடும்பத்தில் விரிசலா?

சென்னை (23 ஜன 2023): நடிகர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் லடாய் என்பதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்த லடாய்க்குப் பின்னணியில் ஒரு பிரபல நடிகை இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான படம் வாரிசு. கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த படம் ஒருபுறமிருக்க வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்காதது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பெரும்பாலும் சங்கீதா நடிகர்…

மேலும்...

வாரிசு – முதல் விமர்சனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படத்தை கொடுக்க பெரிய முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வம்சி பைடிபைலி. விஜய் ரஷ்மிகா மந்தானா நடிப்பில் வந்துள்ள வாரிசு படத்தை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலர் பலவிதமான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். வாரிசு தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் நடிப்பு…

மேலும்...

தனிமையில் நடிகை தமன்னாவும் விஜய்யும் டேட்டிங் – வைரலாகும் வீடியோ!

கோவா (08 ஜன 2023): நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா கோவாவில் புத்தாண்டு விருந்தில் முத்தமழை பொழிந்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது. வைரலான அந்த வீடியோ குறித்து. தமன்னாவோ, விஜய்யோ எதுவும் பேசாத நிலையில், இருவரும் சாதாரணமானமாகவே இருக்கின்றனர். அதேவேளை ஜனவரி 6 ஆம் தேதி, தமன்னா இன்ஸ்டாகிராமில் நுழைந்து பல புகைப்படங்களை வெளியிட்டார், அவர் புத்தாண்டை எவ்வாறு வரவேற்றார் என்பதை அவரது ரசிகர்களுக்குக் கொடுத்தார். ஆனால் அதில் விஜய் இல்லை. பிரபலங்கள் ஆண்டின் முதல்…

மேலும்...

தளபதி விஜய் சங்கீதா விவாகரத்து?

சென்னை (07 ஜன 2023): நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகிறது வாரிசு திரைப்படம். இதன் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது, வழக்கமாக விஜய் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிகளில் அவரது மனைவி சங்கீதா பங்கேற்பார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. ஆனால் விஜயின் பெற்றோர் பங்கேற்றனர். இதனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் விவாகரத்து ஆகலாம் என்ற தகவல் தீயாக பரவியது. விக்கி பீடியாவில்…

மேலும்...

சக நடிகைகளை தரக்குறைவாக பேசிய விஜய் – வீடியோ!

சென்னை (11 டிச 2022): நடிகர் விஜய், சக நடிகைகளைத் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. நடிகர் விஜய், வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு ஷாம் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் “குஷி” பட ரிலீசின்போது தன்னிடம் பேசியவற்றை நினைவூட்டினார். “அதாவது அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதானாம்ல” என்று விஜயிடம் கேட்டதற்கு கையை மேலே தூக்கி காட்டியதாக ஷாம்…

மேலும்...

மோசமான நிலையில் தமிழ் சினிமா – விஜய் பட இயக்குனர் ஆதங்கம்!

சென்னை (21 ஏப் 2022): அனுபவமில்லாத இயக்குநர்களால் தமிழ் சினிமா மோசமாக உள்ளதாக விஜய்க்கு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விழா ஒன்றில் பேசுகையில், மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஹிட் படம் பண்ண தான் ஆவலுடன் இருப்பதாக இயக்குநர் பேரரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறார். விஜய்க்காக 3 கதைகள் ரெடி பண்ணி வைத்திருப்பதாகவும், இன்றைய சூழலுக்கேற்ப அந்த படத்தின் கதைகள் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்போதெல்லாம்…

மேலும்...

படு குப்பையாகிப் போன பீஸ்ட் – படத்தை தூக்கும் திரையரங்குகள்!

சென்னை (16 ஏப் 2022): கதையில்லாமல் மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்தால் ஓடிவிடும் என்ற கணக்கு பீஸ்ட் படத்தில் தவறாகிப் போனது படக்குழுவினருக்கு. படம் வெளியான முதல் காட்சியிலேயே படத்திற்கு எதிராக கிளம்பிய பாதக விமர்சனங்கள் காரணமாக டிக்கெட் விற்பனை ஸ்தம்பித்துப் போனது. தமிழ்நாட்டில் பீஸ்ட் ஓடினாலே போதும் என நினைத்த நடிகருக்கு போட்டியாக வந்த பக்கத்து மாநில படம் கே.ஜி.எப்.-2, மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் திடீரென காட்சிகளை குறைத்து கேஜிஎப் படத்துக்கு…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி பால் முகவர்கள் முதல்வருக்கு கோரிக்கை!

சென்னை (07 ஏப் 2022): “நடிகர் விஜய் படத்தின் சிறப்பு காட்சிக்கு தடை விதிக்கவும், வன்முறை செயலில் ஈடுபடும் அவரது ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ.பொன்னுசாமி முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை…

மேலும்...

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்கு குவைத்தில் தடை!

குவைத் (05 ஏப் 2022): விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு சில நாட்களே உள்ள நிலையில், குவைத் அரசாங்கம் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், பணயக்கைதிகள் திரில்லர். குவைத்தின் நலன்களுக்கு எதிரான முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல்  பீஸ்ட் திரைப்படம் காட்டுவதால். படத்தை தடை செய்ய அரசு முடிவு செய்தது. முன்னதாக, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் திரைப்படங்களும் அங்கு தடை செய்யப்பட்டன. பீஸ்ட் திரைப்படம்…

மேலும்...