சக நடிகைகளை தரக்குறைவாக பேசிய விஜய் – வீடியோ!

Share this News:

சென்னை (11 டிச 2022): நடிகர் விஜய், சக நடிகைகளைத் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

நடிகர் விஜய், வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தில் நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஒரு யூட்யூப் சேனலுக்கு ஷாம் அளித்த பேட்டியில், நடிகர் விஜய் “குஷி” பட ரிலீசின்போது தன்னிடம் பேசியவற்றை நினைவூட்டினார்.

“அதாவது அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கதானாம்ல” என்று விஜயிடம் கேட்டதற்கு கையை மேலே தூக்கி காட்டியதாக ஷாம் நினைவூட்டினார்.

அதேபோல 12 பி படத்தில் ஷாம் கதாநாயகனாக அறிமுகமானது பற்றி பேசிய விஜய், “முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா என்ற இரண்டு குதிரைகளுடன் நடிக்கிறாயா?” என்று தன்னிடம் கேட்டார் என ஷாம் நினைவு கூறியுள்ளார்.

பழைய சம்பவம் என்றாலும், நடிகைகளை விஜய் தரக்குறைவாக அன்று பேசிய இந்த உரையாடல் தற்போது வெளியாகி, சினிமா வட்டத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply