முஸ்லிம்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் – பாஜக எச்சரிக்கை!

புதுடெல்லி (08 பிப் 2020): முஸ்லிம்கள் அவர்களது ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கர்நாடக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் முஸ்லிம் பெண்கள் கையில் வாக்காளர் அட்டையுடன் நிற்கும் வீடியோவை பதிவிட்டு, ‘நீங்கள் ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் இது மீண்டும் தேவைப்படும்’ என்பதாக வெறுப்பூட்டும் பதிவை கர்நாடக பாஜக வெளியிட்டுள்ளது. நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி, என்ஆர்பி ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்…

மேலும்...

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படலாம் – ஸ்டேட் வங்கி எச்சரிக்கை!

மும்பை (08 பிப் 2020): பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சேமிப்பு மற்றும் பிற வகையான கணக்குகளை வைத்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், வரும் 28-ம் தேதிக்குள் KYC எனும் படிவத்தை சமர்ப்பிக்கவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. KYC – Know Your Customer எனப்படும் உங்களது வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் என்ற…

மேலும்...

மாணவர்களுக்கு இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டீர்களே மிஸ்டர் ரஜினி?

சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும்…

மேலும்...

துபாயில் கொரோனா வைரஸ் குறித்த வதந்தி – சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை!

துபாய் (30 ஜன 2020): கொரோனா வைரஸ் குறித்து வதந்தி கிளப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் துபாய் குறித்து கரோனா வைரஸ் பாதித்தவர் குறித்த வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது வதந்தி என்று கூறியுள்ள துபாய் போலீஸ் வதந்தி பரப்புபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதித்த சீனாவை சேர்ந்த நான்கு பேர் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும்…

மேலும்...

தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

சென்னை (28 ஜன 2020): பொதுவெளியில் அமைச்சர்கள் கண்டபடி கருத்துக்களை முன் வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் பேசியது தொடர்பாக அமைச்சர்கள் பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதே போல் , ரஜினி என்ன அப்படி பேசிவிட்டார் என்றும், சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். அதேவேளை பல அமைச்சர்கள் ரஜினியின் பேச்சை கண்டித்திருந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள்…

மேலும்...

ஈரான் அமெரிக்கா போர் பதற்றம் – இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

புதுடெல்லி (08 ஜன 2020): ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியர்களுக்கும், இந்திய விமான நிறுவனங்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்தல் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள், ஈராக், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளின் வான் வழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள்…

மேலும்...