சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார்.
மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் மாணவர்களை போராட்டத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கும் ரஜினி சினிமா உச்ச நட்சத்திரங்களின் அதிகாலை சிறப்புக் காட்சிக்கு செல்ல வேண்டாம் என எச்சரியுங்கள். பேனர், பாலாபிஷேகம், நடிகர் படம் போட்ட டீ ஷர்ட், கல்லூரியில் ரசிகர்கள் சண்டை என ஏராளம். இதையெல்லாம் கூட எச்சரிக்க மறந்தது ஏனோ மிஸ்டர் ரஜினி? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.