கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ 5 லட்சம் டெபாசிட் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (29 மே 2021): கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு…

மேலும்...

மதம் மாறிய பிணம் – நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர்!

ஆலப்புழா (29 மே 2021): கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு பல்வேறு படிப்பினைகளை பயிற்றுவித்துள்ளது. அந்த வகையில், கேராளாவில் கொரோனாவால் இறந்த இந்து மதத்தை சேர்ந்தவரின் உடலை எரிக்க கிறிஸ்தவ கல்லறையில் இடம் தரப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழகத்தை சேர்ந்தவரான இவர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளார். ஆனால் அவர் வாழ்ந்த எதாதுவா பகுதியில் தகனம் செய்யும் மேடை கிடையாது. மேலும் அப்பகுதியில் மழை பெய்திருந்ததால் எரிப்பதற்கு இடம் அமையாத…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு – நியாய விலை கடைகள் மூலம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை (28 மே 2021):கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய…

மேலும்...

மருத்துவத்துறைக்கு எதிராக பாபா ராமதேவ் மீண்டும் திமிர் பேச்சு!

புதுடெல்லி (26 மே 2021): இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் 10,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்தனர் என யோகா குரு என தம்மை அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் பேசிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மத்திய அரசு தலையிட்டும் பிரச்னை…

மேலும்...

இந்தியாவிற்கு விடுமுறையில் சென்றவர்களுக்கு சவூதி இந்திய தூதரகத்தின் முக்கிய தகவல்!

ரியாத் (26 மே 2021): சவுதியிலிருந்து விடுமுறையில் சென்ற இந்தியர்கள் இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணுக்கு பதிலாக பாஸ்போர்ட் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்குமாறு சவூதி இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய தூதர் டாக்டர். அவுசஃப் சயீத் கூறுகையில், இந்தியாவில் தடுப்பூசி பெறும்போது ஆதார் எண்ணை ஆவணமாக சமர்ப்பிக்கும் நிலை உள்ள நிலையில் அதற்கு பதிலாக பதிவு செய்ய பாஸ்போர்ட் எண்ணை வழங்குவதன் மூலம், சவுதி அரேபியாவுக்கு வருவதற்கான தொழில்நுட்ப சிக்கல்கள் தவிர்க்கப்படும். என்றார்…

மேலும்...

இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசிகள் கிடைப்பதில் சிக்கல்!

புதுடெல்லி (25 மே 2021): உலகில் கொரோன தடுப்பூசிகளில் அதிக வீரியம் கொண்ட பைசர் தடுப்பு மருந்துக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் பைசர் மாடர்னா தடுப்பு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் பைசர் மாடர்னா, தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும்’ என, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள்…

மேலும்...

கோவேக்சின் தடுப்பூசி குறித்து மேலும் விவரங்கள் கேட்கும் உலக சுகாதார நிறுவனம் !

புதுடெல்லி (25 மே 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி  உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு பட்டியலில் இடம்பெறாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் கோவேக்சின் குறித்து உலக சுகாதார நிறுவனம் மேலும் விவரங்கள் கேட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்காத்ததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மட்டுமே தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது என்ற விதிமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. சர்வதேச…

மேலும்...

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தர தடுப்பூசி நிறுவனம் மறுப்பு!

புதுடெல்லி (24 மே 2021): மாடர்னா கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக பஞ்சாப் அரசுக்கு தர மாடர்னா தடுப்பூசி மறுத்துவிட்டது, அதேவேளை , இந்திய அரசுடன் மட்டுமே நிறுவனம் ஒப்பந்தம் போட முடியும் என கூறிவிட்டது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை நேரடியாக இறக்குமதி செய்ய பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திட்டமிட்டார். இதற்காக உலகளாவிய டெண்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற தடுப்பூசியை பெறுவதற்கு பலவகை வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில் மாடர்னா…

மேலும்...

அலோபதி மருந்துகள் குறித்த கருத்துக்களால் முக்குடைபட்டா பாபா ராமதேவ்!

புதுடெல்லி (24 மே 2021): அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய பாபா ராமதேவ் தனது கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.. யோகா குருவான பாபா ராம்தேவ், சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களை விட, அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது’ என்றார். இதனால் இந்தியாவின் மானம் கப்பலேறியது. ஏற்கனவே கொரோனாவால் இந்தியா அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும்…

மேலும்...

சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து இரண்டு பரிந்துரைகள் முன்வைப்பு!

புதுடெல்லி (23 மே 2021): சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் இரண்டு பரிந்துரைகள் மூன்வைக்கப்பட்டு அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தபப்ட்டுள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு முன் இன்று பிற்பகல் விளக்கக்காட்சி மூலம் இரண்டு பரிந்துரைகள் வைக்கப்பட்டன. முதல் பரிந்துரையின் கீழ், தேர்வுகள்…

மேலும்...