புதுடெல்லி (25 மே 2021): உலகில் கொரோன தடுப்பூசிகளில் அதிக வீரியம் கொண்ட பைசர் தடுப்பு மருந்துக்கு அதிக டிமாண்ட் நிலவுவதால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் டெல்லி அரசுகள் பைசர் மாடர்னா தடுப்பு மருந்துகளை நேரடியாக கொள்முதல் செய்ய முயன்ற நிலையில் பைசர் மாடர்னா, தடுப்பூசிகளை நேரடியாக விற்பனை செய்ய முடியாது. மத்திய அரசுடன் மட்டுமே நேரடியாக தடுப்பூசி விற்பனையை செய்ய முடியும்’ என, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உலக அளவில் பைசர் தடுப்பு மருந்தைப் பயன்படுத்த அதிக போட்டி நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணம் இதன் வீரியம்தான். வைரஸ் தாக்கிய நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் பைசர் தடுப்பு மருந்து 94% பலன் அளிக்கிறது. வேறு எந்த தடுப்பு மருந்தும் இந்த அளவுக்கு வீரியத்துடன் செயல் படுவதில்லை என்ற நிலையில் அதற்கு நிலவும் போட்டியால் இந்தியாவிற்கு பைசர் தடுப்பு மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பைசர் மாடர்னா, தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.