ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீர் நிறுத்தம்!

கொச்சி (13 டிச 2022): ஓடுதளத்திலிருந்து புறப்பட்ட பிறகு விமானம் திடீரென நிறுத்தப்பட்டது. கொச்சி-கோழிக்கோடு-பஹ்ரைன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்இரண்டரை மணி நேரம் தாமதமானது. தொழில்நுட்பக் கோளாறுதான் என்பது அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானத்தில் ஏசி சரியாக இயங்காததால் பயணிகளும் சிரமப்பட்டனர். விமானத்தின் கதவு மூடப்பட்டபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்த பிடிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட பிறகு எந்த அறிவிப்பும் கூட கொடுக்காமல் நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

ஹிஜாபுக்கு தடை விதித்த மேலாளர் – பஹ்ரைனில் மூடப்பட்ட இந்திய உணவகம்!

மனாமா (27 மார்ச் 2022): பஹ்ரைனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள பஹ்ரைன் லான்டர்ன்ஸ் – இந்திய உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உணவகம் தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் முறைப்படி மன்னிப்புக் கேட்டது. 35 ஆண்டுகளாக சேவையில் உள்ள உணவகம், மேலாளர் செய்த தவறுக்கு வருந்துவதாக…

மேலும்...

சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு…

மேலும்...

பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

பஹ்ரைன் (25 பிப் 2020): வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதி வேகமாக பரவி வருகிறது. ‘கோவிட் – 19’ எனப் பெயரிடப்பட்டுள்ள, ‘கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவானது. தற்போது, தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கியுள்ளது.சீனாவுக்கு வெளியே, 30 நாடுகளில், 1,200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது….

மேலும்...