சென்னை (13 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைப்பது, அதற்காக விழா எடுப்பது மற்றும் கடலில் கரைக்கும் வைபவம் ஆகிய அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதித்துள்ளது.
கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும் விநாயகர் சதுர்த்திக்காக பொருட்கள் வாங்க செல்ல நேர்ந்தால், முகத்திரை அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றைப் பேணுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில்தான் பத்தாயிரம் ரூபாய்-க்குக் கறைவாக வருமானம் உள்ள கோவில்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.