கோவை (02 ஏப் 2020): கோவை ஈஷா யோகா மையத்தில் 150 பேர் தனிமை படுத்தப் பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவிலும் 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா உண்மையில் பரவ காரணம் என்ன? என்பதை கவனத்தில் கொள்ளாத அரசும் ஊடகங்களும் தேவையில்லாத தகவல்களை பரப்பி மக்களை குழப்பிக் கொண்டிருப்பதையே தொடர்ந்து செய்து வருகின்றன.
பிப்ரவரி 15 ஆம் தேதியே இந்தியாவிற்குள் கொரோனா உள் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது. அப்படியிருக்க, கொரோனா பரவுவது அதிகமாக கூட்டம் சேரும் இடத்தில்தான் என்பதை கூடவா அரசு உணரவில்லை? அதன் பிறகு இந்தியாவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுவிட்டன. அதில் ஒன்றுதான் கோவை ஈஷா மைய்யத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அதில் பலர் வெளிநாட்டினர். கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்துள்ள இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கூட இங்கு பலர் வந்துள்ளனர். பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுக்க சிவராத்திரி அன்று, இந்த விழா நடந்தது. அங்கு அப்போது உரிய சோதனை மேற்கொள்ளாமல் இப்போது பதறுகின்றது அரசு.
அதுவும் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில்தான், ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் அரசுக்கு எழுந்தது. முக்கியமாக வெளிநாட்டு பயணிகள் மூலம் இங்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து நேற்று கோவை ஈஷா யோகா மையத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அங்கு எத்தனை வெளிநாட்டு பயணிகள் உள்ளனர், வெளி மாநில பயணிகள் எத்தனை பேர் தங்கி இருக்கிறார்கள் என்று சோதனை செய்யப்பட்டது.
இது இப்படியிருக்க கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றவர்கள் எவரையும் ஈஷா மைய்யம் மகா சிவராத்திரி விழாவிற்கு அனுமதிக்கவில்லை. கொரோனா பாதித்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி ஏறியவர்களை கூட அனுமதிக்கவில்லை. என்று மொட்டையாக ஒரு அறிக்கையை வெளியிட்டது ஈஷா மையம். ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களையும் காட்டவில்லை.
இந்த நிலையில் நேற்று நடந்த சோதனைக்கு பின் 150 வெளிநாட்டினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் உடன் தொடர்பு கொண்ட உள்நாட்டு பயணிகள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு பலர் தனிமை படுத்தப் பட்டுள்ளதும். ஈஷா மையத்தில் நடைபெற்ற விழாவிற்கு இத்தாலி போன்ற நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டமையும், அப்பகுதி பொதும்க்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நாடெங்கும் இவ்விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .