சென்னை (01 மே 2020): தமிழகத்தில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3-ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று, இதுவரை இல்லாத அளவாக 161 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் இரண்டு மாத பெண் குழந்தை உட்பட 138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
சென்னையில் 2 மாத பெண் குழந்தை உட்பட 138 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால் பொதுமக்களிடையே பீதி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது.