சென்னை (30 மார்ச் 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று வரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் இது 67 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் இன்று உயர் அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நேற்று வரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில், இன்று 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.