ஆவின் பால் – ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள்!

Share this News:

சென்னை (01 டிச 2022): ஆவின் நிறைகொழுப்பு பால் விலை உயர்வினை சமாளிக்க முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு மாறத் தொடங்கியதால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் அதிகாரிகளோ ஆவின் பால் தினசரி விற்பனை 3லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தவறான தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சரிவடைந்த நிறைகொழுப்பு பால் விற்பனையை சரிசெய்ய நிலைப்படுத்தப்பட்ட பாலிற்கு (பச்சை நிற பால் பாக்கெட்) செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நிறைகொழுப்பு பாலினை தான் வாங்கியாக வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களை ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது.

விளைவு நேற்று (30.11.2022) முதல் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு மொத்த விநியோகஸ்தர்களுக்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் சுமார் 5000ம் லிட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளதால் பால் முகவர்களுக்கான ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் விநியோகத்தை கடுமையாக குறைத்துள்ளனர். அத்துடன் மதிய நேர விநியோகத்தில் சமன்படுத்தப்பட்ட (நீல நிற பால் பாக்கெட்) பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற பால் பாக்கெட்) பாலினை தவிர்த்து நிறைகொழுப்பு பால் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களுக்கு ஆவின் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *