சென்னை (16 ஏப் 2020): ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சுட்டிக்காட்டி, “தீவிரவாத கும்பல் இந்த வேலையயை செய்ய யார் அனுமதித்தது?” என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட ஊர்களில் கட்டுப்பாடுகளை மீறி இருசக்கர வாகனத்தில் சிலர் வெளியே வருவதும், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்
இந்நிலையில், சென்னையில் ஊரடங்கு நேரத்தில் வாகனத்தில் செல்லும் நபர்களை ஆர்.எஸ்.எஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தி விசாரிக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ் கட்சியினரோடு கை கோர்த்து செயல்படுவதை நெட்டிசன்கள் #ChennaiCorpRemoveRSS என்கிற ஹேஷ்டேக்கில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகியுள்ளது. அதே நேரம் இது தமிழ்நாடு அல்ல ஆந்திர மாநிலம் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ சமூக ஆர்வலர் பணிகளுக்கு தீவிரவாத கும்பல் செய்வதை எப்படி அனுமதிக்கிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அவ்வப்போது துணிவாக கேள்வி கேட்பவர் நடிகர் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Siddhartha18509/status/1250021173074644993