அதிமுக பாஜக கூட்டணியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக தலைவர்!

Share this News:

ராணிபேட்டை (03 ஜன 2020): தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுங்கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன், “ முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனக் கூறினார். அவரது இந்தக் கருத்திற்கு எதிர்வினை ஆற்றிய, அதிமுக தலைவர்கள் அதனை மறுத்து, முதல்வர் வேட்பாளர் என்றுமே எடப்பாடி பழனிசாமியே என்று கூறினர்.

இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் ராணிபேட்டையில் பேசிய எல்.முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் வேட்பாளரே தமிழத்தில் ஆட்சி செய்வார் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் பெண்களுக்கு எதிரான நடக்கும் குற்றங்களுக்கு பாஜக ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply