சென்னை இ(09 ஜூன் 2021): அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடாவை தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஜூன் 14 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது.
வரும் ஜூன் 14 ஆம் தேதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது என முன்னாள் அமைச்சசர் ஜெயக்குமார் கூறினார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
“சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; இந்நிலை தொடரும். அதிமுக பொதுச் செயலாளரை புதிதாக தேர்வுசெய்ய மாட்டோம். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியை வழி நடத்துவார்கள்.ஆளுங்கட்சியின் குறைகளை மக்களிடம் எடுத்துச்சொல்வது அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கவேண்டும் . ” என்றார்.
கட்சியின் தற்போதைய சூழலில் இரட்டை தலைமையை நீடிக்கும் என்பது ஜெயக்குமாரின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது.