அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

Share this News:

சென்னை (28 செப் 2020): அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும்.

* கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

எந்த மொழிக்கும் அதிமுக எதிரானதல்ல; ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை.

ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *