மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Supreme court of India
Share this News:

புதுடெல்லி (28 செப் 2020): வேளாண் சட்டங்களை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்புக்‍கு இடையே வேளாண் மசோதாக்‍கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இந்த சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நாடு தழுவிய அளவில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.டி.என்.பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவசாயிகளுக்கு எதிராக உள்ள 3 சட்டங்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தனி தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.


Share this News:

Leave a Reply